Categories: சினிமா

இயற்கையிலேயே பாலா ஒரு சைக்கோ, விஷால் வாழ்க்கையை இப்படி கெடுத்துட்டாரு.. பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவருடைய நடிப்பில் வெளியான சண்டக்கோழி மற்றும் தாமிரபரணி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டன. தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு உருவான மதகஜராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படியான நிலையில் படத்தின் ரீ ரிலீஸ் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் கலந்து கொண்ட நடிகர் விஷால் மேடையில் பேசும் போது கைகள் நடுக்கத்துடன் பேச்சில் தடுமாற்றத்துடன் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவருக்கு உண்மையிலேயே வைரல் காய்ச்சல் இருந்ததாகவும் அதனால் தான் இப்படி மேடையில் பேசியதாகவும் கூறப்பட்ட நிலையில் உண்மையிலேயே விஷாலுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியுள்ளார். விஷாலின் இந்த நிலைமைக்கு இயக்குனர் பாலா தான் காரணம் என்று அவர் பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பாலாவை பொறுத்தவரை தன்னை ஒரு தனி பிறவியாக நினைத்துக் கொள்கிறார். அவர் இயற்கையிலேயே ஒரு சைக்கோ மாதிரி. எல்லா மனுஷங்களையும் தன்னைவிட துச்சமாகத்தான் மதிப்பார். யாரையும் மதிக்கவே மாட்டாரு.

அவருடைய செயல்களில் அகம்பாவம் மற்றும் திமிரு தனம் அதிகமாகவே இருக்கும். தமிழ் சினிமாவில் பாலாவின் சிந்தனை எந்த ஒரு இயக்குனருக்குமே இருக்காது. குரோத சிந்தனையுடன் படம் எடுக்கக்கூடிய ஒரே ஆளு பாலா மட்டும் தான். இன்னைக்கு விஷால் இந்த நிலைமையில் இருக்க முழுக்க முழுக்க காரணம் இயக்குனர் பாலா தான். நல்லா படத்துல நடிச்சுக்கிட்டு இருந்த பையன படம் எடுக்கலாம் என்று கூட்டிட்டு போயி இப்படி நாசம் பண்ணிட்டாரு. உண்மையிலேயே அவன் இவன் திரைப்படத்தில் மாறு கண் போன்று விஷால் நடிக்கவில்லை.

நடந்தது என்னவென்றால் மாறு கண் மாதிரி நடிப்பதற்காக விஷாலுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து அப்படி பண்ணிட்டாங்க. இது போன்ற காட்சிகளை ஒரு மாதத்தில் முடிப்பதை விட்டுவிட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக கிராமத்திற்கு விஷாலை அழைத்துச் சென்று பாலா இப்படி பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் விஷால் நிறைய ட்ரீட்மென்ட் பார்த்தும் அதை சரி பண்ணவே முடியல. இன்னைக்கி அவருக்கு நரம்பு தளர்ச்சி தான் காரணம். அதனாலதான் மேடையில பேசக்கூட முடியாம அப்படியே தடுமாறு. அது மட்டுமல்லாமல் விஷாலுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கு. எதுவுமே ஒரு அளவுக்கு தான்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல அவருடைய பழக்கவழக்கங்களும் இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது. அவன் இவன் படத்தில் நடித்து முடித்த பிறகு விஷாலால் பழைய நிலைமைக்கு திரும்பவே முடியவில்லை. மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் சமயத்தில் கூட அவரால் நிறைய நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல்நிலை தான். நல்லா இருந்த பையன கூட்டிட்டு போயி கண்ண தச்சு இன்னைக்கு இந்த அளவுக்கு கொண்டு வந்து நிப்பாட்டிட்டாரு இயக்குனர் பாலா என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பல உண்மைகளை வெளிப்படையாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“விஜய் ஒரு குழந்தை.. அதான் ஸ்டாலின் விட்டுட்டாரு…” தவெக தலைவரை வறுத்தெடுத்த நடிகை ஆர்த்தி…!!

சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…

15 minutes ago

“1,000 கோடி சொத்து.. அதிரடி பிரச்சாரம்…” லால்குடியில் திமுக-வை ஆட்டம் காண வைத்த லீமா ரோஸ்… அதிரும் அரசியல் களம்…!!

திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…

24 minutes ago

செங்கோட்டையன் விலகலால் அதிமுக-வுக்கு பாதிப்பா…? கோபியில் இபிஎஸ் கொடுத்த மாஸ் பதிலடி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…

34 minutes ago

“என் சாவுக்காக என் பிள்ளையே காத்திருக்கிறான்! … தைலாபுரத்தில் கண்ணீர் விட்டு கதறிய மருத்துவர் ராமதாஸ்…!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

35 minutes ago

“யாராவது சொன்னா கொன்னுடுவேன்…” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை…. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…

44 minutes ago

“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…

55 minutes ago