#image_title
விஷால் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை ஜிகே ரெட்டி திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனரும் நடிகருமான அர்ஜுன் சர்ஜாவிற்கு உதவி இயக்குனாக பணிபுரிந்தார் விஷால். 2004 ஆம் ஆண்டு “செல்லமே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு, சிவப்பதிகாரம், சத்யம் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தார் விஷால். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் விஷால். 2012 ஆம் ஆண்டு விஷால் சந்தானம் ஆகியோர் நடித்த சுந்தர் சி இயக்கிய “மதகஜராஜா” திரைப்படம் வெளியாக இருந்தது. சில காரணங்களால் வெளியாகவில்லை.
இந்த திரைப்படம் தற்போது பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் மிகவும் ஆளே மாறி போய் அவரால் சரியாக இருக்க முடியவில்லை பேசும்போது கூட மைக்கை பிடிக்கும்போது அவர் கை பயங்கரமாக நடுங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. இவரது நிலைமையை பார்த்த ரசிகர்கள் மற்றும் பலர் மிகவும் கவலை அடைந்தனர். என்னதான் ஆச்சு இவருக்கு என்று பேசி வந்தனர். தொகுப்பாளினி டிடி கூட விஷாலுக்கு வைரல் ஃபீவர் என்று சமாளித்தார்.
ஆனால் இன்று வலைப்பேச்சு அந்தணன் அவரது சேனலில் விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன என்பதை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் தொகுப்பாளினி டிடி கூறியது போல் விஷாலுக்கு காய்ச்சல் எல்லாம் ஒன்றும் இல்லை. கடந்த சில வருடங்களாக அவர் பல டார்ச்சர்களும் மன உளைச்சலுக்கும் ஆளானார். நடிகர் சங்க தலைவர் பொறுப்பேற்றதிலிருந்தே பல கட்டப்பஞ்சாயத்து பண்ண வேண்டி இருந்தது. அதனால் அவருக்கு மன நிம்மதி இல்லை.
அதேபோல் அவர் தன்னுடன் வைத்திருந்த இரண்டு நண்பர்களை மிகவும் நம்பினார். அவர்களுக்காக எல்லாமே செய்தார். ஆனால் கடைசியில் அந்த நண்பர்களே அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர். அது மட்டுமல்லாமல் முக்கியமான காரணம் பாலா இயக்கத்தில் விஷால் நடித்த “அவன் இவன்” திரைப்படத்தில் அவருக்கு Squint Eye இருப்பது போன்று நடித்திருப்பார். இதனால் அவருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டது.
நாளடைவில் அந்த ஒற்றைத் தலைவலி தீவிரமாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டதால் அதிலிருந்து விடுபடுவதற்கு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு ஒரு சில கெட்ட பழக்கங்களுக்கு விஷால் அடிமையாக ஆனார். அதன் விளைவாகவே தற்போது அவரது உடலில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறது. விஷாலின் இந்த நிலைமைக்கு முதன் முதலாக பாலா தான் காரணம். அந்த படத்தில் அவர் அப்படி நடித்ததால் தான் அவருக்கு எல்லா பிரச்சினையும் ஆரம்பித்தது என்று பகீர் கிளப்பும் தகவலை கூறியிருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…