Categories: சினிமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி டைரக்ட் செய்யும் படம் கன்பார்ம்.. படத்தில் ஹீரோ யாருன்னு தெரியுமா..?

Spread the love

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் நடித்திருந்தனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு முன் இயக்குநர் ஷங்கரிடம் பல படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடிப்பில் மூன்று வெற்றி படங்களை அட்லி கொடுத்தார். தெறி, மெர்சல், பிகில் என்ற அந்த மூன்று படங்களுமே மாஸ் படங்களாக விஜய்க்கும் அமைந்தது. அட்லி தொடர் வெற்றி படங்களை கொடுத்ததால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற இயக்குநராக மாறினார்.

தமிழ் படங்களை இயக்கி வந்த அட்லி, பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் அழைப்பின் பேரின் மும்பைக்கு சென்றார். பதான் என்ற பிளாக் பஸ்டர் மூவியை கொடுத்திருந்த ஷாருக்கான் அடுத்து, தனது ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பை, அட்லிக்கு கொடுத்தார். விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்கள் பாலிவுட்டில் அறிமுகமான ஜவான் படம், இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 1150 கோடி ரூபாய் வசூலை குவித்து, வேற லெவலில் அட்லிக்கு வெற்றியை கொடுத்தது.

இதையடுத்து மும்பையில் சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் குடியேறிவிட்ட அட்லி, 40 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகமும் திறந்துவிட்டார். இந்நிலையில், அட்லி இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அட்லி இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்க போவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூனா, அல்லது ஷாருக்கானா என்பதுதான் இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில் ஷாருக்கான் அவரது படங்களை, தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பது வழக்கம். ஜவான் படம் கூட, அதனால்தான், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முடியாமல் போனதாக தெரிய வந்துள்ளது. எனினும் ஸ்கிரிப்ட் எழுத துவங்கி விட்டார் அட்லி. இன்னும் 3, 4 மாதங்களில் அட்லி தனது படத்தை துவங்கி விடுவார் என்றும் உறுதியாகி உள்ளது. ஹீரோ ஷாருக்கானா, அல்லு அர்ஜூனா என்பதும் விரைவில் முடிவாகி விடும்.

admin

Recent Posts

அடபாவிங்களா…! காதலிக்காக மருத்துவமனை சென்ற வாலிபர்… வார்டில் ஒலித்த அந்த ஒரு பாட்டு… ஆஸ்பத்திரி பெட்டில் நடந்த விபரீத டுவிஸ்ட்…!!

காதலில் விழுந்தவர்கள் செய்யும் வேடிக்கையான குளறுபடிகளுக்கு என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணம். அவனுக்குக் காரம்…

6 minutes ago

“திருவிழா முடியட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”… மாயமானதாக நாடகமாடிய காதலன்… 7 மாத கர்ப்பிணியை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்…!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…

17 minutes ago

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

33 minutes ago

“அம்மா எங்கே?”… தவிக்கும் 3 பச்சிளங் குழந்தைகள்… தாயின் உயிரைக் குடித்த குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை… கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…

43 minutes ago

ஒற்றைக் காலில் 400 மீட்டர்…! ஊன்றுகோல் கூட இல்லாத ஏழ்மை… ஒரு வீடியோவால் மாறிய விதி… அரசு செய்த நெகிழ்ச்சி உதவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…

50 minutes ago

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

1 மணத்தியாலம் ago