இனி ஒரே ஜாலிதான்.. திருமணம் முடிந்த கையோடு ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா..!

By Nanthini on ஆனி 10, 2025

Spread the love

தமிழ் சின்னத்திரையை பொருத்தவரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் பிரியங்கா. இவர் எந்த நிகழ்ச்சியில் வந்தாலும் அந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து முடியும் வரை கலகலப்பாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கும் விதம் அட்டகாசமாக இருக்கும். இவருக்காகவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை மக்கள் பார்க்கின்றனர். இவரும் மாகாபா ஆனந்தம் இணைந்து தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த ஏப்ரல் மாதம் பிரியங்கா திடீரென மறு திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Start Music Season 6 | Coming Soon - Promo

   

திருமணத்திற்கு பிறகு சந்தோசமாக இருந்தவருக்கு சமீபத்தில் காலில் திடீரென அடிபட்ட நிலையில் அந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரியங்கா எப்போது மீண்டும் விஜய் டிவியில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில் தற்போது பிரியங்கா ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது பிரியங்கா விஜய் டிவியில் தனியாக தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் மியூசிக் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். கலகலப்பான புரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் பிரியங்காவுக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

   

 

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Vijay Television பதிவைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)