தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகியாக திகழ்ந்து வந்தவர்தான் சின்மயி. பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் உள்ள டப்பிங், பின்னணிப் பாடகர்கள் யூனியன் உள்ளிட்ட அனைத்து யூனியன்களில் பணியாற்ற அவருக்கு தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் தக் லைப் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி முத்தமலை பாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இவ்வளவு திறமையான பாடகிக்கு எப்படி ரெட் கார்டு கொடுக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் பாடல் ஆசிரியர் வைரமுத்துவின் மீதான பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. வைரமுத்து குறித்த இசையமைப்பாளர் கங்கை அமரன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், வைரமுத்து என்னுடைய நண்பர் என்பதால் அவர் செய்யும் தவறை கேட்காமல் விட்டுவிட முடியுமா. அநியாயம் நடந்தது நடந்தது தான். வைரமுத்து ஒரு தங்கமான மனிதர். அப்படிப்பட்ட ஆள் மேல நீ குற்றம் சொல்லலாம். அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று அழகாக எழுதியவர். அவர் எவ்வளவு உத்தமமான ஆள். அவர் ஒரு அதிசய பிறவி. அவரைப் பற்றி அவரே சொல்லிக் கொள்வார். வைரமுத்து ஒரு நல்ல கவிஞன் என்று ஒத்துக்கொள்கிறோம்.. ஆனால் நல்ல மனிதர் கிடையாது. வைரமுத்து பற்றி பேசினால் என்னை கைது செய்து விடுவார்களா. இந்த நிகழ்ச்சி முடித்துவிட்டு நான் முதல்வர் வீட்டுக்கு தான் போகப்போகிறேன் என்று சின்மயிக்கு ஆதரவாக கங்கை அமரன் குரல் கொடுத்துள்ளார்.
