தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி. பரோட்டா காமெடி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூரி தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி விடுதலை, கொட்டு காளி உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து சூரி நடிப்பில் இறுதியாக வெளியான மாமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை திரைப்படம் மூலமாக சூரியை ஒரு ஹீரோவாகவே மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டனர்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட் ஆகி சூரி பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். இதனிடையே சூரி நடிகர் விமலுடன் இணைந்து வள திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் இவர்களுடைய காம்பினேஷன் நன்றாகவே இருந்தது. இப்படியான நிலையில் நடிகர் சூரி விமல் குறித்து ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்து உள்ளார்.

அந்தப் பதிவில், என் வாழ்க்கையில் வரம் போல வந்தவர், உண்மையான நண்பனும், உறவாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒரே ஒரு காட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் அன்புக்காக வந்தது அவருடைய மனிதத் தன்மையை காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு. அவருடைய தோற்றம் மாமன் படத்திற்கு கிடைத்த ஒரு கிப்ட் என்று கூறி விமல் மாமன் படத்தில் ஒரு காட்சியில் நடித்ததற்காக சூரி நன்றி தெரிவித்துள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
