இன்றைய காலகட்டத்தில் நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதன்படி நார்வே நாட்டின் ஓஸ்லோநகரை சேர்ந்த 55 வயதான ஆர்ன் என்ற மருத்துவர் கடந்த 20 ஆண்டுகளாக தன்னிடம் சிகிச்சை பெற வந்த 70க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2004 முதல் 2022 ஆம் ஆண்டு வரை மருத்துவப் பணியில் இருந்த இவர் அந்த சம்பவங்களை தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்திருந்தார்.
இந்த புகார்களை தொடர்ந்து அவரிடம் சிகிச்சை பெற்ற பல பெண்கள் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தனர். மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற சாட்சிகளின் அடிப்படையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
