“2012-ல் அடகு வைத்த நகை இன்னும் வரல…” 28 பேரின் கனவை சிதைத்த தனியார் நிறுவனம்…. உஷாரா இருங்க மக்களே…!!

Spread the love

தேனி மாவட்டத்தில் கடந்த 2012-13 ஆண்டுகளில், தனியார் நிதி நிறுவனங்கள் அதிக கடன் தருவதாகவும், குறைந்த வட்டி என்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்து பொதுமக்களிடம் நகைகளை வாங்கின. ஆனால், அந்த நிறுவனங்கள் மக்களின் நகைகளைத் தனியார் வங்கிகளில் மறுஅடகு வைத்துப் பெருமளவு பண மோசடியில் ஈடுபட்டன.

இது தொடர்பாகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதில் போடி பகுதியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் நகையை வைத்த 28 பேர், 12 ஆண்டுகளாகத் தங்கள் நகைகளைத் திரும்பப் பெற முடியாமல் இன்றும் தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களை வைத்துக் கொண்டு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. நகையை மீட்பதற்காக ‘நலச் சங்கம்’ அமைத்துப் போராடி வரும் இவர்கள், நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலரிடம் கண்ணீருடன் மனு அளித்தனர்.

தனியார் நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல், ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்ற அரசு வங்கிகளிலேயே நகைகளை அடகு வைக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது. முறையான கடன் தொகையைச் செலுத்திவிட்டுத் தங்களின் வாழ்நாள் சேமிப்பான நகைகளை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Devi Ramu

Recent Posts

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

20 seconds ago

காலையிலேயே ஷாக்… இந்தியாவுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து… குவைத்தின் அதிரடி முடிவால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…

48 seconds ago

“ஆப்புன்னு நினைச்சா அதிர்ஷ்டம்” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்… இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 1 லட்சம் கோடி லாபம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…

4 minutes ago

“ஈரான் மீது குண்டு வீச தயார்!” – உலகை அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் ஓப்பனாக வார்னிங்… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி 24 மணிநேர கெடு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…

4 minutes ago

“கண்ணை மூடு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”… காதலியின் பேச்சை நம்பிய இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெங்களூரை நடுங்க வைத்த சம்பவம்…!

பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

7 minutes ago

வாக்காளர்களைத் தொந்தரவு செய்தா தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம்… அமித் ஷாவின் அதிரடி ‘வார்னிங்..!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…

8 minutes ago