அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் அணுஆயுத தயாரிப்பு முயற்சியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் பிரதிநிதிகள் இன்னும் வராதது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஈரான் உடனடியாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும், தவறினால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ‘ஸ்க்வாக் பாக்ஸ்’ நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ஈரான் மீது குண்டு வீசத் தானும் அமெரிக்க ராணுவமும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். “எங்களிடம் அதிக காலம் இல்லை, இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்பட வேண்டும்; இல்லையெனில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை என எதுவும் இருக்காது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு ஒப்பந்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும், போர் நிறுத்தம் நிறைவு பெற்றால் ஈரானில் பல குண்டுகள் வெடிக்கும் என்றும் அவர் விடுத்த வார்னிங் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் இந்த மிரட்டலுக்கு ஈரானும் அதிரடியாகப் பதிலளித்துள்ளது. இது குறித்துப் பேசிய ஈரான் அரசின் செய்தி தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி, ஈரான் மீண்டும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளாக விரும்பவில்லை என்றாலும், அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கினால் அதற்குப் பதிலடி கொடுக்கத் தயங்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். இந்த முறை ஈரானின் பதிலடியானது முன்பை விட மிகவும் உறுதியாகவும் அதிரடியாகவும் இருக்கும் என அவர் எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அது ஒரு நாள் தள்ளிப்போய் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதற்கிடையே, சீனா ஈரானுக்கு ரகசியமாக ஆயுதங்களை விநியோகிப்பதாக எழுந்துள்ள புகார்களும் இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன. அமெரிக்காவின் பிடிவாதம் மற்றும் ஈரானின் பதிலடி நிலைப்பாட்டால் சர்வதேசச் சந்தையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…