“கண்ணை மூடு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”… காதலியின் பேச்சை நம்பிய இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெங்களூரை நடுங்க வைத்த சம்பவம்…!

Spread the love

பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அஞ்சனா நகரைச் சேர்ந்த பிரேமா (27) மற்றும் ராஜாஜி நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய கிரண் (27) ஆகிய இருவரும் கடந்த சில காலமாகக் காதலித்து வந்துள்ளனர். சமீபகாலமாக கிரண் தன்னைத் தவிர்ப்பதாக எண்ணிய பிரேமா, அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று, வேலை முடிந்து திரும்பிய கிரணை தனது வீட்டிற்கு வரும்படி பிரேமா அழைத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், “மேற்கத்திய பாணியில்” (Western Style) உன்னிடம் காதலைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று ஆசையாகக் கூறி கிரணை நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய கிரணும் அதற்குச் சம்மதித்துள்ளார். காதலியின் விபரீத எண்ணத்தை அறியாத அவர், பிரேமாவின் திட்டத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்தார்.

திட்டமிட்டபடி கிரணின் கை, கால்களைக் கயிற்றால் கட்டிய பிரேமா, அவரது கண்களையும் கறுப்புத் துணியால் கட்டியுள்ளார். இதுகுறித்து கிரண் கேட்டபோது, “உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் (Surprise) காத்திருக்கிறது” என்று கூறி அவரை அமைதிப்படுத்தியுள்ளார். பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததால் தப்பிக்க வழியின்றி கிரண் அலறியபடியே தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரச் செயலை பிரேமா தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் பேடரஹள்ளி போலீசார் விரைந்து வந்து பிரேமாவைக் கைது செய்தனர். காதலிப்பதாகக் கூறிவிட்டு ஏமாற்றியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொலையைச் செய்ததாகப் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பெங்களூர் மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

2 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

9 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

22 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

32 minutes ago

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

42 minutes ago