கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் என எந்த ஒரு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற முடியவில்லை. இதனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கின்றார். அதனால் திமுகவை எதிர்க்கும் பாஜகவோ ஏற்கனவே அதிமுக கூட்டணி அமைத்துவிட்டது. ஒரு பக்கம் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கும் விஜய் தங்கள் பக்கம் இருக்கும் முயற்சியில் ஈபிஎஸ் இறங்கினார்.
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் விஜய் அதிமுகவுடன் இணைய வேண்டும். தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பயிற்சி தேவை. அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அதிமுகவினர் வழங்குவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வெளிப்படையாக கூறியிருந்தனர். இதனிடையே கரூர் சம்பவத்தில் திமுகவிற்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் எடப்பாடி பேசத் தொடங்கினார். எப்படியும் விஜய் தனது கூட்டணிக்கு வந்து விடுவார் என்று அவர் நம்பிக்கையாக இருந்த நிலையில் அவர் நினைத்தபடி விஜய் அதிமுக கூட்டணிக்கு இதுவரை வந்து சேரவில்லை.
அதே சமயம் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் இடையே தான் போட்டி என்று தொடர்ந்து விஜய் கூறி வருகின்றார். இது அதிமுகவை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் கூட செல்லூர் ராஜு விஜய்யின் பேச்சை கண்டித்து கருத்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் விஜய்க்கு எதிராக பேச தொடங்கியுள்ளார்.
நேற்று திருத்தணியில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், புதிதாக கட்சி தொடங்கியவர்கள் அதிமுக பலம் தெரியாமல் பேசுகின்றனர் என்ற விஜயை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். விஜய் அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்பது உறுதியானதால் விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அதிமுக விஜயுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்ற கருத்தும் உறுதியாகியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…