முதன்முறையாக பிரபல நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி… எந்த நாடு தெரியுமா…?

By Soundarya on ஆனி 15, 2025

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறை பிரதமராக நீடித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் உலகின் பல நாடுகளுக்கும் இவர் பயணம் செய்து அந்த நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்களை சந்தித்து இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது விரைவில்  ஜி7 மாநாட்டிற்காக கனடா செல்லும் பிரதமர் மோடி முதன்முறையாக தான் கால் பதிக்காத ஒரு நாட்டிற்கு செல்ல உள்ளார். அதாவது மத்திய தரை கடலில் உள்ள தீவு நாடான சைப்ரஸ் நாட்டிற்கு செல்கிறார். அந்த நாட்டு அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் இவர் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இருக்கிறார்.

அங்கிருந்து புறப்பட்டு 17ஆம் தேதி கனடா செல்லும் அவர் அங்கு நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். பதினெட்டாம் தேதி அங்கிருந்து புறப்படும் அவர் ஐரோப்பிய நாடான குரோஷியாவிற்கு செல்கிறார். அங்கு அந்த நாட்டு பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.  இந்திய பிரதமர் ஒருவர் குரோசியாவிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணித்து வந்த நிலையில் அவருடைய முதல் குரோஷியா பயணம் ஐரோப்பிய – இந்திய உறவில் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.