அன்றும் ஒரு உயிரை காப்பாற்றிய 11A இருக்கை… 27 ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகருக்கு நடந்த அதிசயம்..!!

By Soundarya on ஆனி 15, 2025

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் புறப்பட்ட சில நிமிடங்களில் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது. இந்த விமானத்தில் விமான ஊழியர்கள், பயணிகள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில் 241 பேர் உயிரிழந்தார்கள். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார் 11A என்ற சீட்டில் அமர்ந்திருந்த விஷ்வாஸ் குமார் மட்டும்தான் பலத்த காயத்தோடு உயிர் பிழைத்துள்ளார். இந்த இருக்கை விமானத்தில் இறக்கை மற்றும் அவசரக் கதவின் அருகே அமைந்திருக்கும். இந்த இருக்கையில் அமர்ந்திருந்த விஷ்வாஸ் குமார் உயிர் பிழைத்ததால் உலக அளவில் பயணிகள் இந்த இருக்கையை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

   

   

மற்றொரு விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1998 டிசம்பர் 11ஆம் தேதி பாங்காங்கிலிருந்து புறப்பட்ட  தாய் ஏர்வேஸ் சர்வதேச விமானம்  தரையிறங்கும் போது விபத்தை சந்தித்தது. இதில் பயணித்த 146 பேரு 101 பேர் உயிரிழந்தார்கள். இதில் இந்த இருக்கையில் பயணித்த தாய்லாந்து நடிகரும், பாடகருமான ரூங்சக் லோய்சுசக் மட்டும் உயிர் தரப்பினார். இந்நிலையில் அகமதாபாத் விபத்து குறித்து, “தான் அமர்ந்த அதே இருக்கையில் அமர்ந்திருந்த நபர் இந்திய விமான விபத்தில் தப்பித்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.