மாணவர்களுக்கு ரூ.1,000 – ரூ.25,000 உதவித்தொகை… அரசு புதிய அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 15, 2025

Spread the love

இந்தியாவை பொறுத்த வரையில் ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் பயனடையும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ள நிலையில் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://scholarship.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.