பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ரன்பீர் கபூர். இவர் மறைந்த பிரபல நடிகர் ரிஷிகா கபூரின் மகனாவார். நடிகர் ரன்பீர் கபூர் கடந்த 2007 ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் சவாரியா மூலம் நடிகராக அறிமுகமானார். அறிமுகப்படம் தோல்வி படமாக அமைந்தாலும் அதனை தொடர்ந்து வந்த படங்கள் அவருக்கு ஓரளவு பெயரை பெற்று தந்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பர்ப்பி திரைப்படத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவராக ரன்பீர் கபூரின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்று தந்ததுடன் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார். இவர் இறுதியாக நடித்து வெளியான அனிமல் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததுடன் ஆயிரம் கோடி வசூலையும் ஈட்டியது. பிரம்மாஸ்திர திரைப்படத்தில் நடித்த போது நடிகை ஆலியா பட்டை காதலித்த நிலையில் அதன் பிறகு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்று அழகிய பெண் குழந்தை உள்ளது.

இப்படியான நிலையில் சமீபத்தில் ரன்பீர் கபூர் ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த ஆடை குறித்து இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அவர் அணிந்திருந்த அந்த ஆடையின் விலை பலரையும் மலைக்க வைத்துள்ளது. அவர் அணிந்திருந்த அந்த ஷர்ட் அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான gerg lauren பிராண்டை சேர்ந்தது. இது பாதிக்கு பாதி சட்டையும் டி ஷர்ட்டும் கலந்த மாதிரி இருக்கும். 50/50 everest fleece pullover ரகத்தை சேர்ந்த இந்த சர்ட்டின் விலை சுமார் 87,300 ரூபாயாகும். இந்தச் செய்தி ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.
