பிரதமர் மோடி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் நிலையில் பிரதமர் மோடி சர்ச்சுக்கு சென்று விட்டார், முதலமைச்சர் என்றாவது கோவிலுக்கு வந்திருக்கிறீர்களா என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எப்போதும் சனாதனத்தை நான் ஒழிப்பேன், நான் கிறிஸ்தவன் தான், இந்து மதம் வேற்றுமையை விதைக்கிறது என்று உதயநிதி உளறிக் கொண்டிருக்கிறார். உதயநிதி நீங்கள் துணை முதலமைச்சர். அனைவருக்கும் பொதுவாக தான் இருக்க வேண்டும்.
நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றோம். ஆனால் எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள். தமிழக கலாச்சாரத்தை யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ அவர்களை சங்கிகள் என்று முத்திரை குத்துவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையான நேற்று பாரத பிரதமர் தேவாலயத்திற்கு சென்றார். முதலமைச்சர் என்றாவது கோவிலுக்கு வந்திருக்கிறீர்களா இதுதான் நாங்கள் வைக்கும் கேள்வி. தொடர்ந்து நீங்கள் வேற்றுமையை விதைத்து இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போவாவது நீங்கள் திருந்துங்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
