“தம்பி வீணா போயிடாதீங்க, எங்க கூட வருவது தான் நல்லது”… விஜயை கூட்டணிக்கு அழைத்த தமிழிசை சௌந்தரராஜன்..!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படும் நிலையில் விஜய்க்கு மக்கள் மத்தியில் கூடுதல் ஆதரவு உள்ளது.

இதனிடையே விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் கட்டி வருகின்றன. இது தொடர்பாக விஜய்க்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.

   

நீங்கள் தனியாக நின்று ஒன்றும் செய்ய முடியாது என்பதை தான் நான் மீண்டும் தம்பி விஜய் இடம் சொல்கிறேன். எல்லோரும் இணைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். ஆகையால் வீணாகப் போய் விடாதீர்கள். நாம் எல்லோரும் சேர்ந்து திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். திமுகவை வீழ்த்த எல்லோரும் ஒன்று சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஏற்கனவே பலமாக உள்ளது. விஜயும் வந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.