தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் மிஷ்கின். அவர் ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அவரிடம் உதவி இயக்குனராக மிஷ்கினை சேர்த்து விட்டவர் சுந்தர் என்பவர்தான். அவர் சினிமா துறை சார்ந்தவர் என்பதால் வின்சென்ட் செல்வாவிடம், மிஷ்கின் குறித்து எடுத்துக்கூறி திறமைமிக்கவர் என்று சிபாரிசு செய்து சேர்த்து விட்டிருக்கிறார்.
மேலும் மிஷ்கினின் அப்போதைய வறுமையான வாழ்க்கை குறித்தும் எடுத்து சொல்லியிருக்கிறார். சுந்தர் அப்படி கூறிய பிறகுதான், ஏற்கனவே தேவையான உதவி இயக்குனர்கள் தன்னிடம் இருந்த நிலையிலும், உதவி இயக்குனராக மிஷ்கினை இயக்குனர் வின்சென்ட் செல்வா சேர்த்துக்கொண்டுள்ளார்.
ஆனால் சினிமாவில் பெரிய அளவில் பிரபலமான பிறகு ஒரு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், யாருப்பா அது அந்த பையன் பேரு என்ன, சுந்தரா சுந்தர் தானே? அந்த பையன்தான் என்னை வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக ஜாயிண்ட் பண்ண வெச்சான் என்று அலட்சியமாக பேசியிருக்கிறார். இப்படி மிஷ்கின் நன்றி மறக்கலாமா? என்று இந்த விஷயத்தை வீடியோ ஒன்றில் மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியிருக்கிறார்.
