தேவாலயத்தில் அதிர்ச்சி…! பிரம்மாண்ட சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் பரிதாப பலி… லைவ் ஒளிபரப்பில் பயங்கரம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

ஈக்வடார் நாடு குவாடாகியுல் நகரில் உள்ள தேவாலயத்தில், நேரலை திருப்பலி வழிபாட்டின் போது பிரம்மாண்டமான மரச் சிலுவை திடீரென சரிந்து விழுந்ததில் பாதிரியார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 17 அன்று ‘நுவெஸ்ட்ரா செனோரா டெல் பெர்பெது சொக்கோரோ’ தேவாலயத்தில் பாதிரியார் பாட்ரிகோ ஆல்பிரடோ சான்செஸ் மோலினாரி திருப்பலி பூஜையை நடத்தி நேரலை செய்துகொண்டிருந்தார்.

   

அப்போது சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மரச் சிலுவை திடீரெனக் கழண்டு அவர் மீது பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இந்த அதிர்ச்சிகரமான விபத்து நேரலையில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில், குவாடாகியுல் பேராயம் அவரது மறைவுக்கு அதிகாரப்பூர்வமாக இரங்கல் தெரிவித்துள்ளது..