அய்யய்யோ… ஏஐ போலி படம் மூலம் சதி?… யூடியூப் ஜோடி அபி – நியுவை… நெட்டிசன்களிடம் அம்பலப்படுத்திய துருவ் ரத்தீ… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Swetha on ஐப்பசி 19, 2026

Spread the love

லண்டனில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது எடிட் செய்யப்பட்ட போலிப் படங்களை யூடியூப் ஜோடியான அபி மற்றும் நியு பகிர்ந்ததாக யூடியூபர் துருவ் ரத்தீ குற்றம்சாட்டியுள்ளார். தவறான தகவல்களையும் போலிச் செய்திகளையும் மீண்டும் பரப்புவதாக அவர்கள் மீது ரத்தீ காட்டமாகக் விமர்சித்துள்ளார்.

இந்தச் சர்ச்சையின் மையப்பகுதி, போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றங்கள் செய்யப்பட்டது தான். அசல் படத்தில் இல்லாத கொடிகள் அல்லது அடையாளங்களை ஏஐ மூலம் சேர்த்ததன் மூலம், அந்த நபரின் செயல்பாடுகளையும் அமைப்பையும் தவறாகச் சித்தரிக்கும் முயற்சி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

   

https://twitter.com/the_dark_masked/status/2111721196119269693/video/2

   

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. களத்தில் நடக்கும் உணர்வுபூர்வமான நிகழ்வுகள் மற்றும் போராட்டங்கள் குறித்துப் பதிவிடும் போது, மில்லியன் கணக்கில் பின்தொடர்பவர்களைக் கொண்ட இணையச் செல்வாக்காளர்கள் உண்மைத்தன்மையைச் சரிபார்த்துப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.