“என்னங்க இது…?” குப்பை மேடாக மாறிய மலைப்பாதை…. சுற்றுலா பயணிகளின் அலட்சியம்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

இமாச்சலப் பிரதேசத்தின் பிரபல சுற்றுலாத் தலமான மெக்லியோட்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு அழகிய மலைப்பாதை, சுற்றுலாப் பயணிகளின் பொறுப்பற்ற செயலால் குப்பை மேடாக மாறியுள்ள காட்சி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தரம்சாலா அருகே அமைந்துள்ள இந்த மலைப்பாதையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், உடைகள் மற்றும் காகிதக் கழிவுகள் சிதறிக்கிடக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுற்றுலாப் பயணிகளின் இந்த பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்துள்ள நெட்டிசன்கள், மலைப் பகுதிகளைப் பாதுகாக்கக் கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைத் குப்பை மேடாக்கும் இத்தகைய செயல்களுக்கு எதிராகக் கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் குரல்கள் வலுத்து வருகின்றன.