BREAKING: டீ, காபி பிரியர்களுக்கு ஷாக்… தமிழகம் முழுவதும் விலை உயர்வு…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

அத்தியாவசியப் பொருளான சர்க்கரையின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள டீக்கடைகளில் டீ மற்றும் காபி விலை இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது சர்க்கரை விலையேற்றமும் டீக்கடை உரிமையாளர்களுக்கு கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. பால், காபி தூள், சர்க்கரை மற்றும் எரிபொருள் என அனைத்துப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்வது தங்களைச் சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த விலையேற்றத்தால் நுகர்வோரின் வருகை குறைந்து, தங்களது நாளாந்திர வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக டீக்கடை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் இந்த விலை உயர்வைச் தடுத்து நிறுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் தமிழக அரசு உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தீவிரமாக வலியுறுத்தியுள்ளனர்.