மற்ற மசாலாக்கும் ‘பிரேம்ஜி மசாலா’-க்கும் இதுதான் வித்தியாசம்.. இனி இது ஒன்னு இருந்தா போதும்.. பிரேம்ஜி மனைவி இந்து வெளியிட்ட வீடியோ..!

By Nanthini on கார்த்திகை 21, 2024

Spread the love

நடிகர் பிரேம்ஜி முரட்டு சிங்கிளாகவே காலத்தை கழித்து வந்த நிலையில் இதை பெருமையாக பல இடங்களிலும் பேசி வந்தார். ஆனால் அவரையும் காலம் திருமண பந்தத்தில் சேர்த்து விட்டது. சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை பிரேம்ஜி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கலாட்டா செய்தவர் தான் பிரேம்ஜி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். நடிகர் பிரேம்ஜி பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த தம்பி ஆவார்.

திருமணமானவுடன் புது Business-ல் களமிறங்கிய பிரேம்ஜி மாமியார்- என்ன தொழில்  தெரியுமா? - மனிதன்

   

தன்னுடைய அண்ணன் படங்களில் நடித்து தனது டைமிங் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவருடைய கேங்கிலேயே தொடர்ந்து முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார். இதைப் பெருமையாகவும் பல பேட்டிகளில் இவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. நட்பாக தொடங்கிய இவர்களுடைய சினேகம் காதலாக மாறி இறுதியாக திருமணத்தில் நிறைவடைந்துள்ளது. திருத்தணி முருகர் கோவிலில் தான் இவர்களுடைய திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. தற்போது பிரேம்ஜி திருமண வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இவருடைய மாமியார் சமீபத்தில் பிரேம்ஜி பெயரிலேயே ஒரு புதிய தொழிலை தொடங்கியிருந்தார்.

   

பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா ஆரம்பிக்க காரணம் அவர்தான்!” - பிரேம்ஜி மனைவி  இந்து பேட்டி - Vikatan

 

அதாவது பிரேம்ஜி மாமியார் மசாலா என்று அவர் புதிய மசாலா நிறுவனத்தை தொடங்கியிருந்த நிலையில் தற்போது அது களை கட்டிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பிரேம்ஜி மனைவி இந்து அடிக்கடி வீடியோக்களை பகிர்ந்து வரும் தற்போது அவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், நாம் பொதுவாக சமையலுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மசாலாவை பயன்படுத்துவோம். முன்பெல்லாம் சமையலுக்கு மல்லி மசாலாவை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது பெரும்பாலானோர் கரம் மசாலா பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

பிரேம்ஜி மனைவியின் இத்தனை இன்ஸ்டா போஸ்ட்டும் வியாபாரத்திற்கு தானா?  வெளிப்பட்ட சுயரூபம்.. | Tamil Cinema News

உண்மையிலேயே கரம் மசாலா வட இந்தியா மசாலா தான். மல்லி தூள் தான் நம்முடைய இந்திய பாரம்பரிய மசாலா. தற்போது பிரேம்ஜி All in one மல்லி மசாலா புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஒரு மசாலா மட்டும் இருந்தா போதும் அனைத்து உணவுகளையும் சமைத்து விடலாம். இனி மட்டன் மற்றும் சிக்கன் என அனைத்துக்கும் தனித்தனியாக மசாலா வாங்காமல் இந்த ஒரு மசாலாவில் 12 பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்டுள்ளதால் இதனை மட்டும் பயன்படுத்தினால் போதும். மற்ற மல்லி மசாலாக்களில் வெறும் மல்லி மட்டும்தான் இருக்கும். ஆனா நம்ம பிரேம்ஜி மல்லி மசாலாவில் மொத்தம் 12 பொருள்கள் சேர்க்கப்பட்டு அனைத்து உணவுகளுடனும் சேர்க்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது என பிரேம்ஜி மனைவி இந்து பேசியுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

PremgI’s Mamiyar maSala இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@premgismamiyarmasala)