சிம்புவின் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த தல அஜித்.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!

By Nanthini on கார்த்திகை 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் இயக்குனர், நடிகர் மற்றும் பாடகர் என பல திறமைகளுடன் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் டி.ராஜேந்திரன். இவருடைய மகன் தான் சிம்பு. சிறுவயதிலிருந்தே தனது தந்தையுடன் இணைந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது தந்தையைப் போலவே இயக்குனர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என சிம்பு பல திறமைகளுடன் சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார். இவர் 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற திரைப்படம் மூலமாக தான் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்து கொண்டார்.

சிம்பு படத்துல எதுக்கு நடிச்சோம்னு ஃபீல் பண்ணேன் - மனம் திறந்த நடிகர்! -  தமிழ்நாடு

   

மேலும் இளம்பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தார். அதன் பிறகு பல வெள்ளித்திரை படங்களில் நடித்த சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என அறியப்பட்டார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றார். பிறகு ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் அதன் பிறகு மீண்டும் தனது உடலை மெருகேற்றி ஈஸ்வரன் மற்றும் மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கம்பேக் கொடுத்தார்.  இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

   

சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா: அத்தனை சொத்துக்கும் சிம்புதான்  சொந்தக்காரரா? - மனிதன்

 

இதனைத் தொடர்ந்து சிம்பு கமிட் செய்து வைத்திருந்த STR 48 படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனிடையில் கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாக்கி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்புவின் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த அஜித்.. வீடியோ இதோ

நடிகர் சிம்பு அஜித்தின் மிக தீவிர ரசிகர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றுதான். தன்னுடைய பல திரைப்படங்களில் அஜித்தின் ரெபரென்ஸ் சிம்பு நடித்துள்ளார். இந்த நிலையில் சிலம்பாட்டம் திரைப்படம் வெளிவந்து சுமார் 16 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அந்த திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக நடிகர் அஜித் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.