CINEMA
என்னோட படத்தில் பிரேம்ஜி நடிக்க கூடாதுன்னு சொன்ன விஜய்.. அதுக்கு இதான் காரணமா..?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது.
சினிமாவை பொருத்தவரை அஜித் விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும் அவர்கள் இருவரும் நண்பர்களாக தான் இருக்கின்றனர். மங்காத்தா படம் போல கோட் படம் போல 100 மடங்கு இருக்க வேண்டும் என அஜித் வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளார். மங்காத்தா படத்தில் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அந்த சமயத்தில் விஜயுடன் பேசியது பற்றி பிரேம்ஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பிரேம்ஜி கூறியதாவது, 2011 ஆண்டு மங்காத்தா ரிலீஸ் ஆனது. அப்போ நான் விஜய் சார்கிட்ட தலையோட ஒரு படம் நடிச்சிட்டேன். உங்க கூட ஒரு படம் நடிக்கணும் அப்படின்னு சொன்னேன். உடனே விஜய் சார் ஏய் நீ தல ஆளுன்னு எனக்கு தெரியும்.
நீ என் கூட நடிக்க கூடாது உங்க அண்ணன் படத்துல நான் நடிக்கும் போது நீ அந்த படத்துக்கு மியூசிக் பண்ணும். நீ அந்த படத்தில் நடிக்க கூடாது அப்படின்னு சொன்னாரு. நான் அண்ணன் பிளீஸ், உங்க ஃபேன்ஸ் எல்லாரும் திட்டுறாங்கன்னு அப்படின்னு சொன்னேன். அவரு அதெல்லாம் முடியாது நீ மியூசிக் பண்ணு அப்படின்னு சொல்லிட்டாரு என ஜாலியாக பேசியுள்ளார்.