CINEMA
மகாராஜா முதல் தங்கலான் வரை.. 100 கோடியை தாண்டி வசூலை வாரி குவித்த படங்கள்..!!
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய் மேல் வசூல் செய்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
அரண்மனை 4:
சுந்தர்.சி இயக்கத்தில் மே மாதம் மூன்றாம் தேதி அரண்மனை 4 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றி படமாக மாறியது.
மகாராஜா:
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை நித்தலன் சுவாமிநாதன் இயக்கினார். இந்த படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. உலக அளவில் 108 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மகாராஜா படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இந்தியன் 2:
உலக நாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை மாதம் 12-ஆம் தேதி ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் உலக அளவில் திரைப்படம் 151 கோடி ரூபாய் வசூல் செய்தது. கமல்ஹாசன் படங்கள் என்றாலே சூப்பர் ஹிட் ஆகும். ஆனால் இந்தியன் 2 படம் ஏமாற்றத்தை தந்தது.
ராயன்:
தனுஷ் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்போது ஓடிபி தளத்திலும் வெற்றி நடை போடுகிறது. ராயன் திரைப்படத்தை தனுஷ் தான் இயக்கியுள்ளார். உலக அளவில் ராயன் திரைப்படம் 158 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஆனது. இந்த படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் இசையும் பிளஸ் பாயிண்ட் அமைந்தது.
தங்கலான்:
விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கினார். தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உலக அளவில் தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.