Connect with us

“ராமமூர்த்தி கேரக்டர்ல நடிச்சது நான் இல்ல”.. பாக்கியலட்சுமி சீரியல் பற்றி மனம் திறந்த நடிகர் ரோசரி..!

CINEMA

“ராமமூர்த்தி கேரக்டர்ல நடிச்சது நான் இல்ல”.. பாக்கியலட்சுமி சீரியல் பற்றி மனம் திறந்த நடிகர் ரோசரி..!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராமமூர்த்தி இறந்துவிட ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் உள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக எதிர்பாராத வகையில் ராமமூர்த்தியின் மரணம் வந்துள்ளது. குடும்பத்திற்கு தூணாகவும் பாக்கியலட்சுமிக்கு வரும் பிரச்சனைகளில் துணையாக இருந்து வந்த இவர் இப்போது இல்லை என்பதை சீரியல் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

   

இந்த நிலையில் இது குறித்து நடிகர் ரோசரி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், அண்ணா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் இருக்கு வந்து சீரியல் தரப்பினர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர். சீரியலில் என் கதாபாத்திரம் முடியவில்லை. நான் சரி இருக்கட்டும் என்று சொல்லிவிட்டேன். அப்போது அவர்கள் ராமமூர்த்தியின் இறுதி தருணம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

   

 

நானும் ஒரு நடிகர் அதனால் அதற்கு தகுந்தது போல சரியாக நடிக்க வேண்டும் என்று காட்சிகளை நடித்து முடித்து இருக்கிறேன். ராமமூர்த்தியின் இறுதி தருணங்களை பார்த்து எங்க வீட்ல எல்லோரும் ரொம்ப ஃபீல் பண்ணுனாங்க. நான் ராமமூர்த்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பது என்னுடைய சாயல் நடிப்பு கிடையாது.

அது என்னுடைய அப்பாவின் கேரக்டர் தான். ராமமூர்த்தி அப்படியே என்னுடைய அப்பாவை தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். இனி சீரியலில் ராமமூர்த்தி இல்லாமல் போன பிறகு அடுத்தடுத்து கதை திருப்புங்கள் வரப்போகிறது என்று நடிகர் ரோசரி கூறியுள்ள செய்தி ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top