நெஞ்சடைக்குது பா… துபாய் Burj Khalifa கட்டடத்தில் விளம்பரம் செய்ய இவ்ளோ செலவாகுமா…?

By Meena on செப்டம்பர் 3, 2024

Spread the love

துபாய் என்றாலே நாம் நினைவுக்கு வருவது Burj Khalifa தான். Burj Khalifa ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என கூறப்படும் துபாயில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடம் ஆகும். இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இதில் 163 மாடிகள் உள்ளது.

   

828 மீட்டர் உயரமுள்ள இந்த Burj Khalifa கட்டடம் 2004 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி 2019 ஆம் ஆண்டு முடிவடைந்து திறக்கப்பட்டது. இது பெரிய அளவிலான பயன்பாட்டு வளர்ச்சியின் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

   

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னாள் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யன் நினைவாக இந்த கட்டிடம் Burj Khalifa என்று பெயரிடப்பட்டது. இந்த Burj Khalifa துபாயின் வெப்பமான கோடை வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உரைப்பூச்சு அமைப்பையும் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 57 லிஃப்ட், 163 மாடிகள் மற்றும் எட்டு எஸ்கலேடர்கள் உள்ளன.

 

சமீபத்திய காலங்களில் Burj Khalifa கட்டிடத்தின் வெளியே லேசர் லைட் களின் மூலம் பல படத்தின் விளம்பரங்கள் தனிநபரின் விளம்பரங்கள் திரையிடப்படுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த Burj Khalifa கட்டிடத்தில் விளம்பரம் செய்வதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா?

இந்த Burj Khalifa கட்டடத்தில் நம் விளம்பர வீடியோவை திரையிட வேண்டும் என்று நினைத்தால் முதலில் உரிமையாளரிடம் அனுமதி வாங்க வேண்டும். பின்னர் நாம் போட்டுக் காட்டப்படும் வீடியோவை அவர்களிடம் முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.

வார நாட்களில் Burj Khalifaவில் உங்களது வீடியோ 3 நிமிடத்திற்கு திரையிடப்படுவதற்கு ஆகும் செலவு 57 லட்சமாகும். இதே வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ள நேரத்தில் இரவு 8 மணிக்கு திரையிட நீங்கள் விரும்பினால் அதற்கு 79 லட்சம் செலவாகும். இது ஒவ்வொரு விளம்பர வீடியோவில் நேரத்தை பொறுத்து மாறும். அதிக நேரம் கொண்ட வீடியோக்கள் என்றால் அது கிட்டத்தட்ட ஒரு கோடி வரைக்கும் கட்டணம் செல்லுமாம். இதுவே Burj Khalifaவில் விளம்பரத்தை திரையிட வாங்கப்படும் கட்டணம் ஆகும்.