CINEMA
இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணதுக்கு 2 மாதம் அழுதேன்… ஓபனாக பேசிய விக்ரம்…
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் விக்ரம். 1990 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் நடித்து வந்தாலும் 1999 ஆம் ஆண்டு சேது என்ற திரைப்படத்தின் மூலம் பேரும் புகழும் அடைந்தார் விக்ரம்.
ஆரம்பத்தில் 1988 ஆம் ஆண்டு கைலாசம் பாலச்சந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் விக்ரம். பின்னர் 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடித்து வந்தார் விக்ரம்.
சேது திரைப்படம் விக்ரமின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், தூள், அருள் போன்ற அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார் விக்ரம்.
அடுத்ததாக அந்நியன், பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ஐ, ராஜபாட்டை, தாண்டவம், 10 எண்றதுக்குள்ள, இருமுகன், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் என கமர்சியல் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் விக்ரம்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம். இந்த ஆண்டு அவர் நடிப்பில் தங்கலான் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விக்ரம் ஒரு நேர்காணலில் தான் தவறவிட்ட படங்களை பற்றி பேசும்போது பம்பாய் படத்தில் முதலில் அரவிந்த்சாமிக்கு பதிலாக நடிப்பதற்கு எனக்கு தான் வாய்ப்பு வந்தது. அப்போது நான் வேறொரு படத்திற்காக தாடி வளர்த்திருந்தேன். அந்த தாடியை பம்பாய் படத்திற்காக ஷேவ் செய்ய முடியாது என்று கூறியதனால் அந்த வாய்ப்பு அரவிந்த்சாமிக்கு போனது. அந்த படம் வெளியான பின்பு இந்த படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று இரண்டு மாதங்கள் அதற்காக அழுதேன் என்று ஓபனாக பேசி உள்ளார் விக்ரம்.