CINEMA
மர்மமான முறையில் இறந்த 90ஸ் நாயகன் குணால்… காரணம் தெரிஞ்சா நீங்களே வருத்தப்படுவீங்க…
நடிகர் குணால் இந்தியாவின் ஹரியானாவில் பிறந்தவர். தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர். இவரின் முழு பெயர் குணால் சிங் என்பதாகும். 1999 ஆம் ஆண்டு காதலர் தினம் என்ற திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான சோனாலி பிந்தரே உடன் இணைந்து நடித்து தமிழில் நாயகனாக அறிமுகமானார்.
இத் திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்ததால் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றியடைந்தது. பாலிவுட்டில் சோனாலி பிந்தரே புகழ் காரணமாக இத்திரைப்படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு நல்ல விமர்சனங்களை பெற்றது.
அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு குணால் மற்றும் சிம்ரனின் தங்கையான மோனல் இணைந்து நடித்த திரைப்படம் பார்வை ஒன்றே போதுமே. இத்திரைப்படம் குணாலுக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து புன்னகை தேசம், வருஷமெல்லாம் வசந்தம், பேசாத கண்ணும் பேசுமே, எங்கே என் கவிதை, ராகவா லாரன்ஸ் உடன் அற்புதம் ஆகிய வெற்றி திரைப்படங்களில் நடித்து வெகு சில காலத்திலேயே புகழடைந்தார் குணால்.
சில காலகட்டத்திற்கு பிறகு சரிவர வாய்ப்பு கிடைக்காத குணால் படங்களில் நடிக்காமல் உதவி எடிட்டராக பணியாற்றினார் மற்றும் தயாரிப்பில் இறங்கினார். ஏற்கனவே திருமணம் ஆன தனது மனைவியை விட்டுவிட்டு வேறொரு நடிகை உடன் மும்பையில் ஒரு குடியிருப்பில் குணால் வசித்து வருவதாக சர்ச்சைக்கு உள்ளானார்.
இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு குணால் தனது மும்பை குடியிருப்பில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவரது மரணம் மர்மமாக இருந்தது. இவரது தந்தை ராஜேந்திர சிங் குணால் தற்கொலை செய்யவில்லை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்று சொல்லி இந்த வழக்கை CBI விசாரணைக்கு மாற்றினார். சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் குணால் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று அனைவரும் பேசி வந்த நிலையில் இவரது மர்மமான இறப்பு அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தது. இன்று வரை அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.