CINEMA
15 வருஷமா சாவித்திரி என் அப்பாவை மிரட்டினாங்க.. உண்மையை போட்டுடைத்த ஜெமினி கணேசனின் மகள்..!!
கோலிவுடில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். இவரது மூத்த மனைவியின் பெயர் அலமேலு. இரண்டாவது மனைவியின் பெயர் புஷ்பவள்ளி. மூன்றாவது மனைவியின் பெயர் சாவித்திரி. நான்காவது மனைவியின் பெயர் ஜூலியானா. ஜெமினி கணேசனுக்கும் அலமேலுக்கும் நான்கு மகள்கள் இருக்கின்றனர்.
இரண்டாவது மனைவி புஷ்ப வள்ளிக்கு இரண்டு மகள்களும், மூன்றாவது மனைவி சாவித்திரிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் மூத்த மனைவிக்கு மகளாக பிறந்த கமலா செல்வராஜ் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது சினிமா துறையில் இருந்த அத்தனை பெண்களுக்கும் என் அப்பா மேல ஒரு கண்ணு இருக்கும். அவரை பார்த்து மயங்காத பெண்களை இல்லை.
சாவித்திரி இரவு கொட்டும் மழையில் எங்க வீட்டுக்கு ஓடி வந்த பெண். அவர் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவருக்கு தாலி கட்டி மனைவியாக வாழ்க்கை கொடுத்தார். சாவித்திரிக்கு கையெழுத்து போட தெரியாது. தமிழ் பேசத் தெரியாது. அது எல்லாம் அவளுக்கு கற்றுக் கொடுத்தது என் அப்பா தான். கார் ஓட்டவும், குதிரை சவாரி செய்யவும் சொல்லிக் கொடுத்தார். 15 வருஷம் எங்க அப்பாவை மிரட்டி அவரை நைட்டு எங்க வீட்டுக்கு வரவிடாமல் அவ வீட்டிலேயே வச்சிருந்தா.
என் அம்மாவுக்கு அப்பா மேல ரொம்ப பிரியம். அதனால் விவாகரத்து செய்யாமலேயே எங்க அம்மாவும் இருந்துட்டாங்க. உசுரே போனாலும் அவரை விட்டுப் போக மாட்டாங்க. அந்த மாதிரி ஒரு குடும்பத்தை சாவித்திரி கலைச்சிட்டா. அவங்க பொண்ணு அவரை வீட்டை விட்டு துரத்தினால் தான் சாவித்திரி அண்ணா நகர் போனார். முறையாக வருமானவரி தாக்கல் செய்யாமல் கண்டவங்களோடு உறவு வைத்துக் கொண்டதால் எல்லாவற்றையும் இழந்து விட்டார் சாவித்திரி என கமலா செல்வராஜ் கூறினார்.