செம டிவிஸ்ட்டா இருக்கே..! அதிமுக முன்னாள் அமைச்சருடன் பிரேமலதா திடீர் சந்திப்பு… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!!

By Soundarya on ஆவணி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் முதல்வர் ஸ்டாலினை பிரேமலதா சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற நிலையில் நலம் விசாரிக்க மட்டுமே ஸ்டாலினை சந்திக்க சென்றதாக பிரேமலதா கூறினாலும் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பல யூகங்களுக்கு வித்திட்டு உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது பிரச்சாரத்தில் யாரையும் விமர்சிக்க போவதில்லை என்று பிரேமலதா கூறியுள்ளதும் கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையில் திமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி முடிவில் பிரேமலதா மிகவும் சஸ்பென்ஸாக காய் நகர்த்தி வருகிறாராம்.  திமுக கூட்டணியில் 9 சீட் வழங்குவதாக உறுதி அளித்த நிலையில், 12 சீட் வேண்டும் என்று பிரேமலதா அடம் பிடிக்கிறாராம். இதனால் இன்னும் ஒரு சீட் கூடுதலாக 10 கொடுக்கவும் திமுக தயாராகிவிட்டதாம். கிட்டத்தட்ட திமுகவோடு தேமுதிக கூட்டணி வைப்பது உறுதி என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் தான் திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியுடன் பிரேமலதா சந்தித்துள்ளார். உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது.