ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வரும் புதிய ஃபாஸ்டேக் கார்டு… விதிமுறை என்ன, எப்படி பயன்படுத்துவது?.. இதோ முழு விவரம்….!

By Divyamayakannan on ஆவணி 8, 2025

Spread the love

ஆகஸ்ட் 15ஆம் தேதி அமலுக்கு வருகிறது வருடாந்திர ஃபாஸ்டேக் .  ஃபாஸ்டேக்கில் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது . மத்திய சாலையின்  போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜூன் மாதம்  ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் வரப்போகிறது என்று அறிவித்திருந்தார்.  வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு வழங்கப்படும் இந்த பாஸ்டேக்கில் வருடத்திற்கு 3000 மட்டுமே என்று கூறியுள்ளார் .

ஆகஸ்ட் 15,  முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்றும் கூறியிருந்தார். இந்த பாஸ்டேக்  வழங்கப்பட்டதில் இருந்து ஒரு வருடத்திற்கு 200 பயணங்கள் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  ஃபாஸ்டாக் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே செல்லுபடி ஆகுமாம். நிறைய பேர் ஃபாஸ்டாக் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆகவே வருடாந்திர பாஸ் நாம் வைத்திருக்கும் ஃபாஸ்டாகிலேயே செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.

   

ஃபாஸ்டாக்-ஐ   நம் வாகனத்தின் உள்ள முன் கண்ணாடியில் சரியாக ஒட்டப்பட வேண்டும். நாம் ஏற்கனவே உபயோகித்துக் கொண்டிருக்கும் ஃபாஸ்டாகில்  வருடாந்திர பாஸ் நம்பரை இணைக்க வேண்டுமாம் மேலும் நாம் வைத்திருக்கும்  ஃபாஸ்டாக் பிளாக் லிஸ்டில் இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். வருடாந்திர  ஃபாஸ்ட்டாகை, நாம் நம்முடைய மொபைலில் இருந்தே வாங்க முடியுமாம்  யாத்ரா மொபைல் ஆப் டவுன்லோட் செய்து அதன் மூலமாகவும் வாங்கலாம் இல்லையென்றால் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) வலைத்தளத்தில் மட்டுமே வாங்க முடியுமாம்.

   

நீங்கள் ஃபாஸ்ட்டாகை வருடாந்திர பாஸ் ஆக  மாற்றுவதற்கு இப்போதே யாத்திரா மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வலைத்தளத்தை பார்வையிட்ட உடன் 3000 ரூபாய் கட்டணம் செலுத்துங்கள்.  பணம் செலுத்தும் போது ஆப்ஷன்கள் வரும் அதை சரியாக கிளிக் செய்து ரூபாய் செலுத்தி விட்டால் பிறகு உங்கள் கணக்கில் , 2 கணக்குகள் வரும் அதில் ஒன்று சாதாரண ஃபாஸ்டாக் , இன்னொன்று வருடாந்திர பாஸ் என்று வரும் அதில் ஒன்றை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.