கண்ணிமைக்கும் நேரத்தில் அறுந்து விழுந்த தொங்கு பாலம்… 5 பேர் பலி, 24 பேர் படுகாயம்… பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்..!!

By Soundarya on ஆவணி 8, 2025

Spread the love

சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா நகரம். மலைகள் நிறைந்த இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறி நின்று இயற்கையின் அழகை ரசிக்கலாம். இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்வார்கள் .அந்த வகையில் நேற்று சுற்றுலா பயணிகள் அங்கு சென்றிருந்த நிலையில் அந்த பாலத்தின் கேபிள் திடீரென்று அறுந்து பாலத்தின் மீது நின்றவர்கள் ஆற்றங்கரை அருகே கற்கள் நிறைந்த பகுதியில் விழுந்தார்கள்.

மீட்பு படையினர் அங்கு செல்வதற்குள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். படுகாயம் அடைந்த 24 பேர் மீட்க பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது . இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பாலத்தின் மீது அளவுக்கதிகமான சுற்றுலா பயணிகள் ஏறியதால் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.