என்னப்பா சொல்றீங்க..! அமெரிக்க அதிபருக்கு பீகாரில் இருப்பிட சான்றா..? அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்..!!

By Soundarya on ஆவணி 8, 2025

Spread the love

பீகாரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போலி ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் பதிவாகியுள்ளது. இதுபோல சில தினங்களுக்கு முன்பாக பாட்னாவில் “டாக் பாபு” என்ற பெயரில் ஒரு நாய் புகைப்படத்தோடு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டு சர்ச்சை ஆன நிலையில் தற்போது ட்ரம்புக்கு இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மோசடியானது தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்த செயல்முறை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாக அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். இது போலியான முயற்சி என்பது உறுதியானதால் இந்த மனுவானது நிராகரிக்கப்பட்டு சைபர் குற்ற பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

   

.