விஜய் எங்க வீட்டு பையன்…. அவர்கிட்ட தான் அந்த கேள்வியை நீங்க கேட்கணும்… ஓபனாக பேசிய பிரேமலதா..!!

By Soundarya on ஆனி 11, 2025

Spread the love

கடந்த தேர்தல்களில் தேமுதிக கட்சியானது அதிமுகவோடு கூட்டணி வைத்து இருந்தது. கடைசி நேரத்தில் மாநிலங்களவை எம்பி சீட்டு கொடுப்பதாக கூறிவிட்டு அதிமுக மாற்றி பேசியதாக தேமுதிக  அதிமுக மீது அதிருப்தியில் இருக்கிறது. இந்த நிலையில் விரைவில் கட்சி மாநாடு நடத்தவும், தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை அதிகரிக்கவும் தேமுதிக அணி தயாராக இருந்து வருகிறது. அதிமுக கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் தேமுதிக மீண்டும் கூட்டணியில் இணையுமா? என்ற கேள்வியும் உள்ளது. இதே நேரத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி அமைக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவிடம் தவெகவுடன் கூட்டணி குறித்து கேளிவியெழுப்பப்பட்டது. அதற்கு, ” இந்த கேள்விக்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன். விஜய் எங்கள் வீட்டு பையன். இன்று நேற்று அல்ல சிறு வயது முதலே அவரை எனக்குத் தெரியும். சாலிகிராமத்தில் இருவருடைய வீடும் பக்கம் தான். இப்போது அவர் அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும் எங்கள் வீட்டுப்பிள்ளைதான். ஆனால் அவருடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது பற்றி நீங்கள் தான் அவரிடம் கேட்க வேண்டும். நாங்கள் கட்சி தொடங்கி இருவது வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. கூட்டணி வைப்பீர்களா? என்று எங்களிடம் கேட்பதை விட கட்சி தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன அந்த கட்சியிடம் தான் நீங்கள் இந்த கேள்வி கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.