பொதுவாக திருமணத்தின் போது மணமகள் வீட்டில் இருந்து நகை, பணம் போன்றவற்றை தான் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மாமியார் ஒருவர் தன்னுடைய மருமகளின் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரை சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் தன்னுடைய மாமியார் தனது வரதட்சணையாக சிறுநீரகத்தை கேட்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அதாவது கடந்த 2021 ஆம் வருடம்தனக்கு திருமணம் நடந்ததாகவும் தன்னுடைய திருமணம் நடந்த நாள் முதல் மாமியார் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார் .
இந்த நிலையில் தான் தன்னுடைய கணவரின் சிறுநீரக கோளாறு குறித்து சமீபத்தில் எனக்கு தெரிய வந்தது என்றும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக என்னுடைய சிறுநீரகத்தை என்னுடைய மாமியார் கேட்டு மிரட்டி வருவதாகவும், இதனால் தான் தாக்கப்பட்டதாகவும் சிறுநீரகத்தை தர முடியாது என்று சொன்னதால் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டதையடுத்து அந்த பெண்ணின் கணவர், மாமியார் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
