இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே கேஸ் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஏழை எளிய மக்களும் சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு சார்பிலும் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி பிரதமர் மோடியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் Ujjwala Yojana மற்றும் PAHAL திட்டத்தின் கீழ் தள்ளுபடி உடன் சமையல் கேஸ் சிலிண்டர் பெரும் பயனாளிகள் ஆதார் அடிப்படையில் இ கேஒய்சி செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எல்பிஜி ஏஜென்சிகளுக்கு நேரில் சென்றும் Indane, Bharat gas, HPGas போன்ற நிறுவனங்களின் செயலிகள் வழியாகவும் இ கேஒய்சி பயோமெட்ரிக் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான கால் அவகாசம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
