செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பிறகு சீரியல் நடிகையாக மாறியவர்தான் நடிகை சரண்யா துராடி. இவர் விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். இந்த சீரியல் இவருக்கு நல்ல ஒரு பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு ஆயுத எழுத்து, சன் டிவியில் ரன் என பல சீரியல்களிலும் நடித்து வந்தார். இப்பொழுது மீண்டும் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் 2 வில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரத்தை ரசிகர்கள் திட்டினார்கள் . இப்பொழுது புரிந்து கொண்டார்கள்
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறுகையில், “என்னை பலரும் நான் பிற மாநிலத்தவர் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் நான் பக்கா தமிழச்சி. என்னுடைய அப்பாவின் ஊர் பாண்டிச்சேரி. என்னுடைய அம்மா பிறந்தது சென்னை. என்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் திராடி என்ற பெயர் எங்கள் ஊரில் கும்பிடும் சிறு தெய்வத்தின் பெயர். தமிழில் பேசுவதற்கு தமிழச்சியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று கிடையாது. நான் தமிழச்சி தான்” என்று கூறியிருக்கிறார்.
