Connect with us

CINEMA

விஜயகாந்தை நேரில் சந்திக்க பலமுறை முயற்சித்த விஜய்.. அனுமதிக்காத விஜயகாந்தின் குடும்பம்.. வெளிவராத ரகசியம்..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அறிமுக நாயகனாக அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் விஜய் என்ற அடையாளம் மட்டுமே இருந்தது. விஜய்க்கான தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை.இந்நிலையில், இப்படியே நீடித்தால் விஜய் தமிழ் சினிமாவில் முன்னேறி சாதிக்க முடியாது என்பதை உணர்ந்துக்கொண்ட எஸ்ஏ சந்திரசேகர், விஜயகாந்திடம் பேசி செந்தூரப்பாண்டி படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க வைத்தார். அதன்பிறகு விஜய் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நடிகராக மாறினார்.

   

இந்த சூழலில் தேமுதிக கட்சியை துவக்கி, தமிழக அரசியலில் முக்கிய இடத்துக்கு வந்தார் விஜயகாந்த். திமுகவை பின்னுக்கு தள்ளி தேமுதிக பெரும்பான்மை பெற்று சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக ஆனார் விஜயகாந்த். ஆனால் ஒரு கட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே அவர் ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டது. கட்சியை பிரமேலதாவும், அவரது தம்பி சுதீஷூ!ம் பார்த்துக்கொண்டனர். ஆனால் விஜயகாந்த் தலைமை இன்றி கட்சி கொஞ்சம் கொஞ்சம் அதன் பலத்தை இழந்தது அடுத்தடுத்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்தது. அதே போல் விஜயகாந்தின் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்தது.

இந்நிலையில், தனது வளர்ச்சிக்கு உதவிய விஜயகாந்தை, நடிகர் விஜய் நேரில் வந்து பார்த்து உடல் நலம் விசாரிக்கவில்லை என்பது ஒரு சர்ச்சையாகவே இருந்தது. ஆனால் பலமுறை விஜயகாந்தை சந்திக்க விஜய் முயற்சித்த நிலையில், அவரது குடும்பம் அதற்கான அனுமதி தரவில்லை. விஜயகாந்தை சந்திக்க, நலம் விசாரிக்க நேரில் வருவதாக விஜய் பலமுறை தகவல் அனுப்பியும், பிரேமலதா தரப்பில் இருந்து விஜயை வாங்க என்று ஒருமுறை கூட அனுமதிக்கவில்லை.

அதேபோல் விஜயகாந்தின் நீண்ட கால நெருங்கிய நண்பரான ராதாரவியும் விஜயகாந்தை சந்திக்க பலமுறை கேட்டும் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. இதற்கு காரணம், உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் ராதாரவி, விஜய் போன்றவர்களை பார்த்து அதிக உணர்ச்சிவசப்பட்டால் அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான், பிரேமலதா குடும்பம் அனுமதி மறுத்துள்ளதாக மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top