BIG BREAKING: யாரோடு கூட்டணி… பிரேமலதா எடுத்த புதிய முடிவு… காத்திருக்கும் அதிரடி க்ளைமாக்ஸ்…!!

By Soundarya on தை 5, 2026

Spread the love
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜனவரி 5, 2026) அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் தங்கள் விருப்பத்தைக் கடிதமாக எழுதி, அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசியலில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கேற்ப, வரும் தை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தேமுதிகவின் தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.