“இது இந்தியாவுக்கு அவமானம்” இந்திய கால்பந்து வீரர்கள் வெளியிட்ட வேதனை வீடியோ – நடிகர் ஜான் ஆபிரகாம் காட்டம்..!!

By Soundarya on தை 5, 2026

Spread the love

சுனில் சேத்ரி, குர்பிரீத் சிங் சந்து, சந்தேஷ் ஜிங்கன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இணைந்து, “இந்திய கால்பந்தைக் காப்பாற்ற வேண்டும்” என ஃபிஃபா (FIFA) அமைப்பிற்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டனர். ஜனவரி மாதம் ஆகியும் ஐ.எஸ்.எல் போட்டிகள் தொடங்காததால் வீரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வீடியோவைப் பகிர்ந்த ஜான் ஆபிரகாம், “இது நமக்கு அவமானம் (Shame on us)… இந்த நிலைக்கு நாம் வந்துவிட்டோம்” என்று மிகவும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த செ ப்டம்பரில் தொடங்க வேண்டிய ஐ.எஸ்.எல் தொடர் 2026 ஜனவரி வரை நடத்தப்படாமல் உள்ளது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF), தள்ளிவைக்கப்பட்ட ஐ.எஸ்.எல் சீசனுக்கான தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 15 முதல் போட்டிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன