“அது என் கணவருடையது எனக்கு வேண்டும்” பிரேமலதா எடுத்த திடீர் முடிவு… திமுக தரப்பு ஆதரவு..!!

By Soundarya on புரட்டாதி 4, 2025

Spread the love

திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆக இருந்தவர் விஜயகாந்த்.  இவர் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் கட்சியில் பல தோல்விகளை சந்தித்து வந்த இவர் திடீரென உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது மறைவிற்கு பின் கட்சியை மனைவி பிரேமலதா தான் வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜயகாந்தின் முன்னாள் MLA பென்ஷன் தொகையான ரூ.15,000 கேட்டு பிரேமலதா விண்ணப்பித்துள்ளார். பல கோடி சொத்து உள்ள உங்களுக்கு எதற்கு இந்த பென்ஷன் என இணையத்தளத்தில் சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், திமுக முன்னாள் MP அப்துல்லா, பணம் என்பதை தாண்டி, தன் கணவர் தன்னை தவிக்கவிட்டு போகவில்லை என ஒரு மனைவியாக அவரை இந்த பென்ஷன் உணர வைக்கும் எனவும், இது வெறும் பணத்திற்காக அல்ல என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.