“ஏழ்மையான மாணவிகள் தான் டார்கெட்”… கூப்பிட்டா வந்தே ஆகனும்…. ஆசிரமத்தில் சாமியார் செய்த அட்டூழியம்… நாட்டையே நடுங்க வைக்கும் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் ஆசிரமத்தில் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி அதன் இயக்குனராக உள்ளார். இந்த ஆசிரமத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையம் என்ற பெயரில் செயல்பட்டு வரக்கூடிய கல்வி நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகிறார்கள். அவர்களில் முதுகலை டிப்ளமோ படித்து வரும் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர். அதாவது சாமியார் பார்த்தசாரதிக்கு எதிராக ஆபாச பேச்சுகள் மற்றும் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல், உடல்ரீதியாக கட்டாயப்படுத்தி தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபட்டார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மாணவிகள் முன் வைத்துள்ளனர்.

அந்த சாமியாரின் வற்புறுத்தலுக்கு ஏற்றது போல நடந்து கொள்ளும்படி பெண் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் மாணவிகளிடம் கூறி அழுத்தம் கொடுத்துள்ளனர். மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறப்படுகின்றது. ஆஸ்ரமத்தில் பணியாற்றும் வார்டன்கள் சிலர் மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாமியாருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் சாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.