திருச்சி மாவட்டம் முசிறி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு 62 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி சிறுமிக்கு தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்ற மதியழகன் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்தே சிறுமி அந்த முதியவருடன் வருவதை பார்த்த தாயார் தன் மகளிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். சிறுமியும் தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகப்பட்டதை தாயிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாயார் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மதியழகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
