கதறி கதறி அழுத பிரவீன் ராஜ்…. கண்கலங்கிய போட்டியாளர்கள்…. இறுதியில் பிக் பாஸ் சொன்ன வார்த்தை….!!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பிரவீன் ராஜ் கதறி கதறி அழ ஆரம்பித்தார். அவர் பேசும்போது, வாழ்க்கையில் தனக்கு குரு என்று யாரும் இல்லை. பிக் பாஸ் தான் காட்பாதர் என நினைத்ததாக பிரவீன் கூறினார். மேலும் போட்டியாளர்களின் பெயரை கூறி அறிவுரை வழங்கினார்.

கனி அக்கா தான் அம்மா போல சோறு போட்டதாக கூறி கண்ணீர் விட்டு அழுதார். மற்ற போட்டியாளர்களையும் அவரது செயல் கண்கலங்க வைத்தது. அப்போது பேசிய பிக் பாஸ், பிரவீன் சிறந்த போட்டியாளர் எனவும், அவர் சொன்னது போல காட் பாதராக இருப்பேன் எனவும் கூறினார். வெளியே வந்த பிரவீன் விஜய் சேதுபதியிடம் பேசும்போது அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என கூறினார். அது ஒரு நாள் நடக்கும் என விஜய் சேதுபதியும் கூற பிரவீன் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார்.