Categories: சினிமா

நடிகை தபுவுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்.. மறுப்பு தெரிவித்த பிரசாந்த்.. என்ன காரணம் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு வந்த பல நடிகர்கள் இன்று காணாமல் போனதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படியான ஒரு நடிகர் பிரசாந்த். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் பிரசாந்த். குறிப்பாக பெண் ரசிகர்கள் இவருக்கு அதிகம். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை கச்சிதமாக எதார்த்தமாக நடிப்பதில் வல்லவர். அப்படி வளர்ந்து வந்த காலத்தில் திடீரென அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவியதால், சினிமாவில் இருந்தே சிறிது காலம் ஓய்வு எடுத்து விட்டார் பிரசாந்த்.

குடும்ப வாழ்க்கையிலும் சரியான பிடிமானம் இல்லாமல் போனவர், மீண்டும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் மீண்டும் ஹீரோவாக வலம் வரலாம் என எண்ணி சில படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் அவருக்கு கைக் கொடுக்கவில்லை. ஆகையால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த அந்தாதூண் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில், நடிகை தபுவுடன் அவர் நடிக்க மாட்டேன் என 2000-ம் ஆண்டே கூறியிருக்கிறார் பிரசாந்த். 2000-ம் ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் படம் கண்டு கொண்டேன், கண்டுகொண்டேன். ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ், மோகன்லால், அஜித் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்த இந்தப் படத்தில், முதலில் பல நடிகர் நடிகைகளிடம் பேசப்பட்டுள்ளது. பிரபு தேவா, மஞ்சுவாரியர், சௌந்தர்யா, பார்த்திபன் என பலரிடம் இப்படத்தில் நடிக்க கேட்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க பிரசாந்திடமும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு வெளியான ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டு நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் மீண்டும் அவருடன் வேண்டுமானால் ஜோடி சேர்கிறேன், தபுவுடன் ஜோடி சேர முடியாது எனக் கூறி அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் பிரசாந்த். அவர் மறுத்தப் பிறகு தான் அந்த வாய்ப்பு அஜித்திற்கு கிடைத்துள்ளது. இன்று வரையிலும் அஜித்தின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இந்தப் படம் இருக்கும்.

Archana

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago