மண்ணை கவ்விய கிங் மேக்கர்… அரசியலை விட்டு விலகுவாரா..? சொன்ன வாக்கை காப்பாற்றுவாரா..? பெரும் எதிர்பார்ப்பு..!!

Spread the love

தேர்வு வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் கிங் மேக்கர் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர்  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்திருக்கிறார். இவருடைய வியூகத்தின் மூலம் பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளனர். 2012 ஆம் வருடம் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடி வெற்றி பெற்று முதல் மந்திரியாக வியூகம் அமைத்துக் கொடுத்தவர் இவர்தான். தமிழ்நாட்டிலும் 2021 ஆம் வருடம் திமுக ஆட்சி அமைப்பதற்கு இவருடைய தேர்தல் வியூகம் தான் காரணம். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவு எடுத்த அவர் மொத்தம் 243 தொகுதிகளில் 238 இடங்களில் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 150 தொகுதியில் ஒன்று குறைந்தாலும் அது தோல்விதான் என்றும் கூறியிருந்தார். கடைசியில் பெரும் நம்பிக்கையோடு இருந்த நேரத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தது. மேலும் பிரசாந்த் கிஷோர் தலைமையான ஜன் சுராஜ் கட்சிக்கு இரண்டு முதல் ஐந்து தொகுதிகள் வரையே கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

கருத்துக்கணிப்பு முடிவால் கொந்தளித்த பிரசாந்த் கிஷோர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது அவ்வாறு நடந்துவிட்டால் நான் அரசியலை விட்டு விலகுவேன் என்று சவால் விட்டார். ஆனால் பீகார் சட்டசபை தேர்தல் முடிவு கருத்துக்கணிப்பில் வெளிவந்தது போலவே அமைந்துவிட்டது. பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சுராஜ் கட்சிக்கு கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது போல ஒன்று இரண்டு தொகுதிகள் கூட கிடைக்காமல் போய்விட்டது. தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் கிங் மேக்கராக  பிரஷாந்த் கிஷோர் தேர்தலில் மண்ணை கவி விட்டார். இனி சவாலின் போது தான் கொடுத்த வாக்குறுதிகள் அரசியல் விட்டு விலகுவதாக கூறியதை நிறைவேற்றுவாரா? என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

1 minute ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

4 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

6 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

10 minutes ago

கழுகுப்பார்வையா இது..? கண்ணிமைக்கும் நேரத்தில்.. தண்ணீருக்குள் இருந்து தூக்கப்பட்ட பிரம்மாண்ட மீன்…! மிரண்டுபோன நெட்டிசன்கள்…!

விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…

12 minutes ago

“பணத்தைக் கொடுத்தா தான் வேலை!” சஸ்பெண்ட் ஆனவரிடமே ₹1.30 லட்சம் லஞ்சம். கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…

14 minutes ago