ஷங்கருக்காக எங்க அப்பாவைக் கைவிட்ட பிரசாந்த்… ஜீன்ஸ் படத்தால் நடந்த குளறுபடி –பிரபல தயாரிப்பாளர் புலம்பல்!

By vinoth on செப்டம்பர் 23, 2024

Spread the love

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. அந்த படத்தைத் தயாரித்தது கதாசிரியர் கலைஞானம். அவருக்கு சமீபத்தில் ரஜினி ஒரு வீடு வாங்கிக் கொடுத்து நன்றிக் கடனை திருப்பி செய்தார்.

   

jeans movie scene

   

ஆனால் அந்த படத்தின் இயக்குனரான எம் பாஸ்கர் குறித்து ரஜினி எங்கேயுமே பேசியதில்லை என அவரின் மகன் பிரபு பாஸ்கர் ஒரு நேர்காணலில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரசாந்தும், அவரது அப்பா தியாகராஜனும் எப்படி தன்னுடைய அப்பாவைக் கைவிட்டார்கள் என்று ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

 

அதில் “பிரசாந்த் வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோது அவரை வைத்து படம் பண்ண எங்க அப்பா ஒப்பந்தம் செய்திருந்தார். அவருக்கு 2 லட்சம் ரூபாய் அட்வான்ஸும் கொடுத்திருந்தோம். ஆனால் அப்போது ஷங்கர் பிரசாந்தை ஜீன்ஸ் படத்துக்காக ஒப்பந்தம் செய்தார்.

அப்போது அவர் போட்ட கண்டீஷன் என்னவென்றால், ஜீன்ஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அவர் ஜீன்ஸ் படம் முடியும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்பதுதான். ஜீன்ஸ் படத்தை நான் எப்போது முடிப்பேன் என தெரியவில்லை. அதனால் அதற்கு சம்மதம் என்றால் மட்டுமே இந்த படத்தில் நடிக்கலாம் எனக் கூறினாராம்.

director and producer baskar

ஷங்கர் அப்போது பீக்கில் இருந்ததால் அவருக்காக எங்கள் படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் பிரசாந்தும் அவர் அப்பாவும். இது எங்க அப்பாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.