இனி யார் கையும் எதிர்பார்க்க வேண்டாம்.. பெண்களுக்கு கை நிறைய பணம் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!

By Nanthini on புரட்டாதி 23, 2024

Spread the love

மத்திய அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு சேமிக்க முடியும். பெண்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் தான் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம். இது ஒரு குறுகிய முதலீட்டு சேமிப்பு திட்டமாகும். இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்ச்சி அடைந்து விடும்.தபால் அலுவலகத்தில் நீங்கள் கணக்கை தொடங்கலாம்.

   

இதில் முதலீடு செய்யும் பெண்களுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதன் அதிகபட்ச முதலீடு 2 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டு வட்டி வருமானம் 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது ஆண்டில் வட்டி வருமானம் 16,125 ரூபாயும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதலீடு செய்த தொகையுடன் வட்டி வருமானம் 31,125 ரூபாயை சேர்த்து மொத்தம் 2,31,125 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்.

   

 

இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களின் நாமினி அல்லது குடும்ப உறுப்பினர்கள் அந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் அவசர மருத்துவ சிகிச்சைக்காகவும் இதில் பணத்தை எடுக்கலாம். மேலும் கணக்கு தொடங்கி ஆறு மாதத்தில் கணக்கை மூடலாம். ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பலரும் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள்.